வாலி வேண்டாம்… அவன் பாட்டு போதும் என் ஆயுள் இருக்கும் வரை கேட்டுகிட்டு இருப்பேன் – தெறிக்க விட்ட விஜயகாந்த்

Vijayakanth : சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்து பேரையும் புகழையும் சம்பாதித்த விஜயகாந்த் நிஜத்திலும் நேர்மையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் பலருக்கும் உதவிகளை செய்து   அவர்களை தூக்கி விட்டார். ரஜினி கமலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடிக்க சத்யராஜ் கார்த்தி பிரபு விஜயகாந்த் போன்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்திலும் கூட விஜயகாந்த் சத்யராஜை வைத்து ஒரு படத்தை தயாரித்து இருந்தார். தனக்கு போட்டியாக இருப்பவருடன் யாரும் பேசவே மாட்டார்கள் ஆனால் விஜயகாந்தின் அந்த மனசு யாருக்கும் வராது என சத்யராஜ் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இப்படிப்பட்ட விஜயகாந்துக்கு படம் பண்ண பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்துக் கிடப்பார்கள் அதேபோல் தான் இசையமைப்பாளர்களும்..

கதிரை சரமாரியாக வெட்டி சாய்க்கும் ரவுடி கும்பல்.! புருஷன் வெட்டுப்படுவதை பார்த்து பதறி அடித்து ஓடிவரும் நந்தினி.. பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ

ராஜ்ஜியம் திரைப்படத்திற்கு சினேகன் பாடல் எழுதியிருந்தார் படத்தில் ஒரு அரசியல் சார்ந்த பாடல் வரவேண்டும் என படகுழு கூறியது. சினேகன் எழுதுவதைவிட கவிஞர் வாலி எழுதினால் சிறப்பாக இருக்கும் என பட குழு நினைத்து அவரிடம் சொல்லி ஒரு பாடலையும் எழுதி தயார் செய்து விட்டனர்.

விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் விஜயகாந்த் சினேகளை ஹைதராபாத்திற்கு வரவைத்து அந்த படத்தின் காட்சிகளை கூறி அதற்கு ஏற்ற வரிகளை எழுத சொன்னார் அப்பொழுது சினேகன் தமிழன் தமிழன் இவன்தான் தமிழன் என்கின்ற பாடல் வரிகளை எழுதினார் அதில் கோட்டை முதல் குமரி வரை கட்டு  ஒரு மாலை ஏழைகளின் தோழன் என்று போடு அவர் மேல என்ற பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

1500 ரூபாய் வாங்கிய வடிவேலு நல்லா இருக்காரு.. நான் நாசமா போயிட்டேன் – வெளுத்து வாங்கிய நடிகர்

விஜயகாந்துக்கு ரொம்ப பிடித்த போக சினேகனை கூப்பிட்டு கட்டிப்பிடித்து என் ஆயுள் உள்ளவரை இந்த பாடல்வரிகளை நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி சினேகளை இதற்காக பாராட்டி இருக்கிறார். படத்தில் வாலி எழுதிய பாடல் வரவில்லை அதற்கு பதிலாக சினேகன் எழுதிய பாடல் தான் வெளிவந்தது.

Exit mobile version