பத்து தல படத்தை பார்க்க ஹெலிகாப்டரில் தான் போவேன்.! பிரபல நடிகர் ஆவேச பேச்சு…

சிம்பு படம் வெளியானால் போதும் இவரை மட்டும் கையிலேயே பிடிக்க முடியாது அந்த அளவிற்கு பேமஸ் ஆகி இருக்கிறார் கூல் சுரேஷ். இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். என்னதான் இவரை காமெடி நடிகர் என்று சொல்வதை விட சிம்புவின் வெறியன் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு சிம்புவின் படங்கள் எப்போது வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சியை போய் பார்த்துவிட்டு தான் வருவாராம் அந்த அளவிற்கு சிம்புவின் தீவிர பக்தராக இருக்கிறார் கூல் சுரேஷ்.

இப்படி இருக்கும் இவர் இவ்ளோ பெரிய பிரபலமானதற்கு சிம்புவின் படம் தான் காரணம். அதாவது வெந்து தணிந்தது காடு எஸ்டிஆர்-க்கு வணக்கத்தை போடு என்ற வசனத்தை வைத்துக்கொண்டு பிரபலமான இவர் தற்போது எந்த படம் திரையரங்கில் வெளிவந்தாலும் அந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுப்பதை இவருடைய வழக்கமாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் போது தலைவர் கூல் சுரேஷ் அவர்கள் ஒரு குதிரையை வைத்துக்கொண்டு படம் பார்க்க போயிருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து இடையில் ஒரு படம் பார்க்கும்போது மது அருந்திவிட்டு தியேட்டரில் வாந்தி எடுத்த சம்பவமும் உண்டு இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு படம் பார்க்க போன பெண்ணை கையை பிடித்து இழுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

cool suresh
cool suresh

இப்படி சம்பவத்துக்கு மேல் சம்பவம் செய்து பிரபலமான நடிகர் கூல் சுரேஷ் தற்போது பத்து தல படத்தை பார்க்க தன்னுடைய சொத்தை வித்தாவது பத்து தல படம் பார்க்க ஹெலிகாப்டர்ரில் தான் போவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தலைவன் எஸ்டிஆர் படத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து மலர் தூவ போகிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் இதற்கான வேலையும் நடந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று சிம்புவின் பத்து தல படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் கூல் சுரேஷ் என்ன அலப்பறை செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Leave a Comment