திருமணம் செய்வேன்.. ஆனா இப்படி தான் செய்வேன்.! பேட்டி ஒன்றில் நச்சின்னு சொன்ன நடிகை நயன்தாரா.?

nayanthara
nayanthara

சினிமா உலகில் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரையிலும் டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருவதால் நம்பர் ஒன் இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டு உள்ளார் நயன்தாரா.

தெனிந்திய திரை உலகில் பல்வேறு மொழி நடிகர்களுடன் நடித்தாலும் தமிழ் சினிமாதான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து தன்வசப்படுத்தி உள்ளது இவர் தற்பொழுது டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

சோலோவாக இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வசூலையும், நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளதால் வாய்ப்புகள் குவிகின்றன. அந்தவகையில் கடைசியாக நெற்றிக்கண் என்ற திரைப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதில் நயன்தாராவின் நடிப்பு உச்சத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்த திரைப் படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா கலந்துகொண்டார் அப்பொழுது பேட்டி கொடுத்துள்ளார் டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது நயன்தாராவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் கல்யாணம் குறித்தும் தகவல்கள் கேட்கப்பட்டன அதற்கு பதிலளித்த நயன்தாரா நான் திருமணம் செய்துகொள்வேன் ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டேன் என அதிரடியாக கூறினார்.

திருமணம் செய்துகொண்ட பிறகே அதனை மற்றவர்களுக்கு அறிவிப்பேன் என கூறினார். நயன்தாரா பல்வேறு விஷயங்களை ஓப்பனாக சொன்னாலும் அவரது திருமணம் குறித்து மட்டும் இன்றளவும் மீடியா பக்கத்தில் அவர் வெளியே சொல்லாமல் ரகசியமாக காத்து வருகிறார்.

நயன்தாரா மீடியா இல்லாமல் மிக எளிமையாக தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.