சூர்யாகுமார் யாதவ் விக்கெட்டை நான் எளிதில் எடுப்பேன் – பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் பேட்டி.

இந்திய அணியில் எத்தனையோ அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர் ஆனால் சூர்யா குமார் யாதவ் அண்மை காலமாக  சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களை முந்தி தற்பொழுது  கிரிக்கெட் பிரபலங்கள்  தொடங்கி ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு வீரராக சூர்யா குமார் யாதவ் இருக்கிறார். இவரை செல்லமாக இந்தியா 360 என அழைத்து வருகின்றனர்.

இவர் ஒவ்வொரு போட்டியிலும் எடுத்த உடனே அதிரடியை காட்டி ரன் மழை குவித்து வருகிறார் ஆசிய கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை என தொடர்ந்து இவரது அதிரடி ஆட்டங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது இவரை விக்கெட் எடுக்கவே முடியாமல் பல பந்துவீச்சார்கள் திணறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் என்னால் சூர்யா குமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்த முடியும் என  பாகிஸ்தான் அணியின் வேக பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்

அவர் சொன்னது என்னவென்றால்..  சூர்யாகுமார் யாதவுக்கு பந்து வீச நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். இன்றைய சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் சூர்யா குமார் யாதவ் தான் சிறந்த பேட்ஸ்மனாக விளங்குகிறார். என்றாலும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி உள்ள மூன்று போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்னதான் ஒரு வீரர் 360 பிளேயர் ஆக இருந்தாலும் அவர்களுக்கும் ஒரு பலவீனம் இருக்கும்..

எந்த ஒரு வீரராக இருந்தாலும் நான்காம் அல்லது ஐந்தாவது ஸ்டெம்ப்லைனில் பந்து வீசும் போது  நிச்சயமாக அவர்கள் தடுமாறுவார்கள் அதனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்துவேன் என கூறினார். இப்படி வஹாப் ரியாஸ் பேசியிருக்க மறுப்பாக்கம் சூரியகுமார் யாதவ் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்  சோயப் மாலிக் அவர் சொன்னது என்னவென்றால்..

wahab riaz
wahab riaz

சூர்யா குமார் யாதவ் மைதானத்தின் தன்மைகளை மட்டும் அலசுவதோடு  விட்டுவிடாமல் பந்துவீச்சாளர்களின் மன நிலைமையையும் வாசிக்கக்கூடியவராக இருக்கிறார் அதனால் அவர் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை அவர் முன்கூட்டியே கணிந்து அதற்கு ஏற்றார் போல ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என கூறினார்.

Leave a Comment