என் படத்துல நான்தான் ஹீரோவை தீர்மானம் செய்வேன்..! கோலிவுட்டில் அட்டூழியம் செய்யும் பிரபல நடிகை..!

nayan

சினிமாவில் அறிமுகமான போது எந்த ஒரு சரியான திரைப்பட வாய்ப்பும் கிடைக்காமல் தட்டுத்தடுமாறி கிடைத்த வாய்ப்பில் சினிமாவில் முகம் காட்டியவர் தான் நமது நடிகை. அதன் பிறகு பிரபல நடிகர் மற்றும்  சிறந்த இயக்குனர் இயக்கத்தில் வெளியான முட்டை திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

அதன் பின்னர் நமது நடிகையின் மவுசு எகிரியதன் காரணமாக முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்தன பின்னர் அந்த நடிகர் உடனே மீண்டும் லோக்கல் படத்தில் நடித்து சினிமாவின் உச்சத்திற்கு சென்றார்.

அதன் பிறகு நமது நடிகை தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கதாநாயகனுடன் ஜோடி போட்டு நடிப்பதைக் காட்டிலும் சோலோ ஹீரோயின் திரைப்படங்களில் அதிக அளவு நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் போலீசாக நடித்த திரைப்படம் கூட நல்ல ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது பிரபலமானதன் பிறகு  ஓவராக சீன் போடுகிறார் என பல்வேறு தரப்பினராலும் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படத்தில் ஹீரோவை கூட இவர்தான் தேர்வு செய்வதாக இருக்கிறதாம் அப்படி மாற்று ஹீரோவை முடிவு செய்தால் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டித்து கூறுகிறாராம்.

ஒரு காலத்தில் ஓரமாக கிடந்த நமது நடிகை கொஞ்சம் காசு பணம் வந்ததன் பிறகு ரொம்ப சீன் காட்டுகிறார் என சினிமா வட்டாரமே அவரை பேசுவது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் இதன்காரணமாக வருத்தத்தில் உள்ளார்களாம்.