விஜய்க்கு செய்த தவறை நானே சரி செய்கிறேன்.! களத்தில் குதிக்க ரெடியாக இருக்கும் இயக்குனர்.. இந்த படம்தான் அவரது கேரியரில் பெஸ்ட் படமாம்.

தளபதி விஜய்யின் சமீபகால ஹிட் திரைப்படங்கள் அதிகப்படியான ரசிகர்களைக் இவருக்கு பெற்று கொடுத்ததோடு உலக அளவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகராக மாறி உள்ளார்.விஜய் அந்த அளவிற்கு தனது படங்கள் நல்ல வரவேற்பு இருப்பதால் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக மாறி உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “மாஸ்டர்” திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான வசூல் பெறவில்லை என தற்போது தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் படம் ரிலீஸ் ஆகி ஓரிரு வாரங்களிலேயே படம் 100 கோடி வசூலை தாண்டி விட்டதாக கூறிய நிலையில் தற்போது இதுபோன்ற செய்திகள் வெளிவருவதால் எது  உண்மை நிலவரம் என்றே தெரியவில்லை.

எது எப்படியோ விஜய்க்கு இது ஒரு நல்ல படமாக இது பார்க்கப்படுகிறது. இதையடுத்து நெல்சன் திலிப்குமாருடன் முதன்முறையாக கைகோர்த்து தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்று உள்ளார்.

விஜய் இவருடன் பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் போன்றோர் களமிறங்கி நடித்து வருகின்றனர்.  இதைத் தொடர்ந்து விஜயின் 66 வது திரைப்படத்தை லோகேஷ் தான் இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் தான் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் மேலும் வலு சேர்க்கின்றன.

இதனால் விஜயின் முதல் படத்தில் செய்த தவறை திருத்திக் கொள்ள அவரும் ரெடியாக இருக்கிறார் ஏனென்றால் முதல் திரைப்படம் கலவையான விமர்சனத்தை கொடுத்ததோடு விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு அந்த படத்தில் நல்ல ரோல் அமைந்து விட்டதாக பலரும் கூறினர்.

இதனால் விஜய் மிகப்பெரிய அப்செட் ஆனார் மேலும் இந்த படத்தில் பவானி கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி நல்ல பெயரை பெற்று கொடுத்து. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து விஜய்யை ஓவர்டேக் செய்து தற்போது தமிழில் பல்வேறு படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்த அளவிற்கு அந்த பவானி கேரக்டரில் மிகப் பெரிய பட வாய்ப்பை அள்ளி கொடுத்து உள்ளது. அதை லோகேஷ் அவர்களும் நன்கு உணர்ந்து விட்டார். இதனால் விஜயின் 66வது திரைப்படத்தில் அதை எல்லாத்தையும் மாறி இதுவரையிலும் இல்லாத அளவுக்கு விஜய்க்கு ஒரு பேஸ்டான திரைப்படத்தை கொடுக்க காத்திருக்கிறார் லோகேஷ்.

Leave a Comment