இந்த மூஞ்சிலாம் பங்களா கட்டுதா என கேட்டாங்க.! ஆனா என் சொந்த காசுல இந்த வீட்ட கட்டுறேன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ.!

nisha
nisha

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடி திறன் மூலம் மக்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து தற்பொழுது திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் அறந்தாங்கி நிஷா.

இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அதன் பிறகு வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களை கைவிடாமல் நடித்து வருகிறார்.
இவருக்கு குடும்பம் இருக்கும் நிலைமையிலும் இவருக்கு உதவியாக இவரது குடும்பம் நிற்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடு என வேறொரு பங்களா உடன் புகைப்படம் வெளியான நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்தினார்கள் ஆனால் ஒரு சிலர் இது இவரது வீடா கண்டிப்பாக இருக்காது என இவரை கலாய்த்தனர்.

இப்படி இருக்கும் நிலைமையில் தன்னை கலாய்த்த நபர்களுக்கு பதிலடி தரும் வகையில் அறந்தாங்கி நிஷா நிஜமாகவே ஒரு வீடு கட்டி வருகிறார்.
அப்படி அவர் கட்டிய வீட்டின் முன்பு நின்று வீடியோவும் பதிவு செய்துள்ளார்.

ஆம் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறுவது மட்டுமல்லாமல் நீங்கள் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அதுதான் எங்களது ஆசை எனவும் கூறி வருகிறார்கள்.