சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி இவருடைய தொண்டராகவே இருப்பேன்.! மனம் திறந்த நடிகர் ராமராஜன்

எம்ஜிஆரின் நடிப்பை பின்பற்றி பல தமிழ் சினிமா நடிகர்கள் நடித்து வருகின்றனர் அந்த வகையில் 80, 90 காலகட்டங்களில் அப்படியே அவரை போலவே நடித்து  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நடிகர் ராமராஜன்.

இவர் இதுவரை 44 திரைப்படங்களில் நடித்துள்ளார் அனைத்துமே கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களாக இருப்பதோடு பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் படமாகவும் இதுவரை இருந்துள்ளது.

இந்த படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் ஹிட்டடித்து அதனால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரகாட்டக்காரன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் இவர் 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் படங்களில் நடிக்காவிட்டாலும் தற்போது சிறப்பம்சம் கொண்ட படங்களை இயக்க கதைகளை ரெடி செய்து உள்ளார் அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராமராஜன் கூறியது.

என்னுடைய அனைத்து படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் படங்களாக கையை எடுத்து உள்ளேன் அப்படித்தான் நான் ஒரு புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கதையை படமாக எடுக்க இருக்கிறேன்.

இதில் விஜய் சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் கூறினார் மேலும் நான் ஜெயலலிதாவின் தொண்டனாகவே கடைசி வரை இருப்பேன் எனவும் தெரிவித்தார் இச்செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

vijay-sethupathi-movie
vijay-sethupathi-movie

Leave a Comment