தளபதியுடன் ஒரே ஒரு படமாது நடிக்கவேண்டும் என 30 வயதிலும் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் பிரபல நடிகை.!

தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் தளபதி விஜய் இவர் தனக்கான மாபெரும் ரசிகர் கூட்டத்தை தமிழ் திரை உலகில் உருவாக்கிவிட்டார். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரை படங்களுமே மெகா ஹிட் தான்.

அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படமானது இணையத்தில் வெளியாகும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

இந்நிலையில் இந்த திரைப்படமானது வருகின்ற தை திருநாள் அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் கூறி உள்ளார்கள். இந்நிலையில் தளபதியின் 65வது திரைப்படத்தை கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனர் தான் இயக்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் தளபதி விஜய் அட்லியின் அலுவகத்திற்கு சென்று வந்ததை பார்த்தால் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

இப்படி சினிமாவில் மிக பிஸியாக இருக்கும் தளபதி விஜயின் திரைப்படத்தில் நடிக்க பல நடிகைகளும் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது 30 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு திரைப்படமாக தளபதி விஜயுடன் நடிக்க வேண்டும் என தீவிர ஆசையுடன் இருந்து வருகிறாராம்.

அவர் வேறு யாரும் இல்லை நம்ம ராசி கண்ணா தான் இவர் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருகிறாராம். அவருடன் நடித்தால் மார்கெட் எகிருவிடும் என மறைமுகமாக கூறியுள்ளார்.

raashi-kannaa
raashi-kannaa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment