இனி வருகின்ற ஒவ்வொரு திரைப்படத்திலும் இதுபோன்று தான் நடிப்பேன் – இயக்குனர்களுக்கு புதிய நிபந்தனை வைத்த விஜய்.?

0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தளபதி அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களின் கதையை தேர்வு செய்து வைத்திருப்பதால் இவர் சினிமாவின் உச்சி நோக்கி பயணிக்க ரெடியாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்லதொரு பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன அதேபோல் தான் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்லிப்குமார் உடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் நிச்சயம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது இந்த படத்திலிருந்து சில செய்திகள் கசிந்த வண்ணமே இருக்கின்றன.

தளபதி விஜய் முதலில் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார் அது அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தர சமீபகாலமாக ஆக்சன் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்தார் இந்த நிலையில் விஜய் புதிய நிபந்தனை ஒன்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது என்னை தேடி வரும் இயக்குனர்கள் ஆக்சன் கலந்த கதையை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார் மேலும் அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடிப்பதையே இனியும் தொடர உள்ளதாக இயக்குனர்களுடன் அவர் சொல்லி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.