மாநாடு ரீமேக்கில் நான்தான் நடிப்பேன்..! ஒற்றைக் காலில் நிற்கும் பிரபல தெலுங்கு நடிகர்..!

சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மாநாடு திரைப்படம். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி அதுமட்டுமில்லாமல் சுரேஷ் காமாட்சி அவர்கள்தான் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

அந்தவகையில் இத் திரைப்படமானது சிம்புவின் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்துவிட்டது ஏனெனில் இந்த திரைப்படத்திற்கு முன்பாக நடிகர் சிம்பு பல வருடங்களாக திரையில் முகம் காட்டாமல் இருந்தது மட்டுமில்லாமல் உடல் எடை கூடி போய் மிகவும் மோசமாக இருந்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய எடையை முற்றிலுமாக குறைத்துவிட்டு  செம்ம மாஸாக மாநாடு திரைப்படத்தில் கலைஞர் இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் பாராட்டுக்களும் புகழும் உச்சத்திற்கு சென்றுவிட்டது.

மேலும் இத்திரைப்படம் வெளியாகிய தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  அந்த வகையில் இத்திரைப்படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கு  பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அவ்வகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிதேஜா அவர்கள் தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் டப் செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த மாநாடு திரைப்படத்தை தன்னுடைய  குழுவினருடன் பார்த்த நிலையில் படத்தின் கதையை பார்த்து விட்டு விட்டார்களாம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவது மட்டுமில்லாமல். இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பலரும் போட்டி போட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் இந்த திரைப்படத்தின் உரிமை யாருக்கு கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

manadu-1
manadu-1

Leave a Comment