“இறுதிச்சுற்று” படத்திற்கு முதலில் இசையமைக்க வேண்டியது நான் தான் – ஜிவி பிரகாஷ் தவற விட்டது எப்படி.? அவரே சொன்ன தகவல்.

0
gv-prakash-
gv-prakash-

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் ஜிவி பிரகாஷ் தற்போது இரண்டிலும் சூப்பராக பயணத்து வெற்றியை ருசித்து வருகிறார் இவர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு இசையமைத்தார். அதற்காக அண்மையில்  தேசிய விருது ஜிவி பிரகாஷுக்கு  கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நானும், சுதாவும் நல்ல நண்பர்கள் ஒரு அக்கா, தம்பி பாசம் எங்களுக்கு இடையே உண்டு. ஆனால் நாங்கள் இருவருமே பயங்கரமாக சண்டை போட்டு கொள்வோம்.

நான் ரகுமான் சார்கிட்ட அசிஸ்டெண்டாக இருந்த பொழுது சுதாகங்காரா மணிரத்தினம் சார் கிட்ட உதவி இயக்குனராக இருந்தார் அப்பொழுது அவர் இறுதிச் சுற்று படம் பண்ணினார் அந்த டைமிங்கில் நீ மியூசிக் இறுதிச்சுற்று படத்திற்கு பண்ண வேண்டும் என கேட்டார் ஆனால் நான் முடியாதுன்னு என சொல்லிவிட்டேன் காரணம் சுதாவுக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை எல்லாம் வந்து கொண்டே..

இருக்கும் நாங்கள் இருவரும் இணைந்து அப்பொழுது பண்ணினால் அது நன்றாக இருக்காது எனக் கூறி நாங்கள் பண்ணவில்லை பிறகு சூரரை போற்று படத்தை  எடுக்க ஆரம்பித்தார் முதலில் எல்லாம் பேசிவிட்டு சுதா என்னிடம் போன் செய்து நீ நிறைய படங்கள் நடிக்கிறியா என கேட்டார் எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது நான் படம் பண்ணுவதெல்லாம் வேற..

நான்  உன்னிடம் ஏதாவது வாக்கு கொடுத்துவிட்டு அதை செய்யாமல் இருந்திருக்கிறேனா என்றேன் உடனே சுதா சரி நீ இந்த படத்திற்கு மியூசிக் பண்ணு என்றார். அப்படிதான் சூரரை போற்று படத்தை நாங்க ரெண்டு பேரும் பண்ணினோம் அவங்க ஷூட்டிங் போவதற்கு முன்னதாகவே எல்லா பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டேன். அதை பார்த்து சூர்யா சார் எனக்கு ஒரு பரிசும் கேக்கும் அனுப்பினார்.