உங்க கருத்தை கேட்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.! வாத்தி படத்தை வைத்து விலாஸ் விலாஸ் என விலாசும் ப்ளூ சட்டை மாறன்…

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இந்த நிலையில் வாத்தி படத்தில் இருக்கும் கருத்துக்களை வைத்து ப்ளூ சட்டை மாறன் பங்குமாக கலாய்த்து இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் நேற்று வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வெளியான வாதி திரைப்படம் ஒரு நாளில் மட்டும் 14 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் பல படங்களை விமர்சித்து பிரபலமான ப்ளூ சட்டை மாறன் அவர்கள் வாத்தி படத்தையும் விட்டு வைக்கவில்லை. அதாவது ப்ளூ சட்டை மாறன் வாத்தி படத்தை பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

அதாவது படம் ஆரம்பிக்கும் போது என்னமோ தமிழ்நாட்டில் நடப்பது போல தான் கதை இருந்தது. ஆனால் போகப் போக ஆந்திரா மசாலாவை கொஞ்சம் தடவி விட்டார் இயக்குனர் வெங்கி அட்லூரி . படத்தின் முதல் பாகம் நன்றாக இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு படும் மோசமாக தான் இருந்தது.

படத்தில் வரும் கதாநாயகன் மற்றும் வில்லன் இருவருமே மூளை சம்பந்தமான தொழில் செய்பவர்கள். இவர்கள் இருவருக்கும் சாராய வியாபாரிகளுக்கு வரும் சண்டையைப் போல இருக்கிறது அதுமட்டுமல்லாமல் வில்லன் ஹீரோவை அடிக்க ஆள் அனுப்புவதும் ஹீரோ அவர்களை அடித்து துரத்துவதும் பார்க்கும்போது ரசிக்கும்படி இல்லை.

படத்தில் ஏகப்பட்ட இடத்தில் பல கருத்துக்கள் இருக்கிறது ஆனால் இந்த கருத்து யாருக்கு வேணும்? இவங்களுடைய இந்த கருத்தை கேட்டு கேட்டு நான் எப்படி கருப்பாயிவிட்டேன். கருத்து எல்லாம் எதுக்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டுமென்றால் மேடையில் பேசுங்க படத்தை படமா எடுங்க என ப்ளூ சட்டை மாறன் வாத்தி படத்தை விலாஸ் விலாஸ் என விளாசி இருக்கிறார்.

Leave a Comment