எனக்கு அந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும்.! ஒரே பிடிவாதம் பிடித்த நடிகை மீனா.. வெளியான சீக்ரெட் தகவல்…

நடிகை மீனா அவர்கள் தனக்கு மாப்பிள்ளை எப்படியாப்பட்ட ஆளாக வேணும் என்று அவருடைய அம்மாவிடம் கூறியிருக்கிறார் இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை மீனா.

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை மீனா இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே தமிழில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் கதாநாயகியாக நடித்த போது பிரபல முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்த நடிகை மீனா அவர்களின் வயதின் காரணமாக சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இந்த நிலையில் நடிகை மீனா அவர்கள் 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினருக்கு நைனிகா என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவின் மகள் நைனிகாவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை மீனா அவர்கள் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மீனா பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார் அப்போது நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள் அப்போது நான் என்னுடைய அம்மாவிடம் எனக்கு ஹருத்திக் ரோஷன் போல ஒரு மாப்பிள்ளை வேணும் என்று கூறினேன்.

ஏனென்றால் எனக்கு ஹருத்திக் ரோஷனை சிறு வயதிலிருந்து பிடிக்கும் அதுமட்டுமல்லாமல் அவருடைய நடிப்பும் நடனத்தையும் பார்த்து அவருடைய தீவிர ரசிகராக மாறினேன் என்று கூறியுள்ளார் நடிகை மீனா. இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment