அந்த ஹீரோ மாதிரி தான் எனக்கு மாப்பிள்ளை வேண்டும்.. பிடிவாதம் பிடித்த நடிகை மீனா.! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

meena
meena

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை மீனா. முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தோன்றிய இவர் பின் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின்னாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் “ஒரு புதிய கதை” என்னும் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.

அதனை தொடர்ந்து இவர் தொட்ட எல்லாமே வெற்றி தான் குறிப்பாக டாப் நடிகர்களான ரஜினி உடன் முத்து, வீரா போன்ற படங்களில் இவருக்கு பெரும் வெற்றியை பெற்ற தந்தது. சரத்குமாருடன் நாட்டாமை, விஜயகாந்த் உடன் சேதுபதி ஐபிஎஸ், அர்ஜுன் உடன் செங்கோட்டை என அடுத்தடுத்த ஹிட் படங்களில்  நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தினார். இப்படி திரையுலகில் இவர் நடிக்கும் போது பலர் இவருடைய அழகையும், திறமையும் பார்த்து காதலித்தனர் ஆனால் நடிகை மீனாவோ  எந்த ஒரு காதல் சர்ச்சைகளும் சிக்காமல் தான் உண்டு தான் சினிமா உண்டு என ஓடினார்.

இருப்பினும் நடிகை  மீனாவுக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் என்றால் அது ஹிந்தியில் இப்பவும் டாப் ஹீரோவாக பலம் வரும் ஹரித்திக் ரோஷனை தானாம்.. இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்  நடிகை மீனா தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் சொன்னது எனக்கு நடிகர் ஹரித்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும் என்னுடைய திருமணத்திற்கு முன்பு என் அம்மாவிடம் எனக்கு ரித்திக் ரோஷன் போன்ற ஒரு மாப்பிள்ளையை பாருங்க எனக் கூறினேன். நான் ஹரித்திக் ரோஷனின் மிகப்பெரிய ஒரு ரசிகை அவரின் நடிப்பு நடனம் எல்லாமே நன்றாக இருக்கும் அதனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார்.