ஒவ்வொரு சீனுக்கும் கஷ்டப்பட்டேன்.! அகிலன் படம் ஜெயிக்க இவர்கள் கையில்தான் இருக்கு.. வருத்ததுடன் பேசிய ஜெயம் ரவி…

0
agilan
agilan

ஜெயம் ரவி அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவே அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

பேராண்மை, தனி ஒருவன், பூலோகம், எனும் மெகா ஹிட் படங்களை கொடுத்து ஜெயம் ரவி தற்போது அகிலன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் பட குழுவினர் இந்த படத்திற்காக பிரமோஷன் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயம் ரவி அவர்கள் அகிலன் படம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் அப்போது பேசிய ஜெயம் ரவி அகிலன் படம் துறைமுகத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நான் பல சவால்களை சந்தித்தேன் இந்த படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்னுடைய கஷ்டத்திற்கு படம் வெற்றி பெறுமா என்று தெரியவில்லை ஆனால் முழுக்க முழுக்க தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் இது சாத்தியமாகாது என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பாபி மாஸ்டரை பேராண்மை திரைபடத்தில் இருந்தே எனக்கு தெரியும் அவரும் இயக்குனருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தன்னை செதுக்கி கொண்டே வருகிறார் அதுமட்டுமல்லாமல் இயக்குனர் கல்யாண் மிகப்பெரிய திறமைசாலி அது மட்டுமல்லாமல் மக்களுக்கு நல்ல விஷயம் சொல்ல ஆசைப்படுபவர் இதனால் இந்த படம் வெற்றி அடையும் என்று கூறி இருக்கிறார் ஜெயம் ரவி.