அனாதையாக நிற்கிறேன்.. என்னுடைய இந்த நிலைமைக்கு நடிகர் வடிவேலு தான் காரணம் என கண்ணீர் மல்க பேட்டி அளித்த பிரபல நடிகை.!

vadivelu
vadivelu

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி சமீப காலங்களாக ஹீரோவாகவும் நடித்து வருபவர் தான் நடிகர் வடிவேலு  இவருடைய நடிப்பில் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை நான் அனாதையாக நிற்கிறேன் எனவும் என்னுடைய இந்த நிலைமைக்கு வடிவேலு தான் காரணம் எனவும் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை பிரேமா பிரியா. இவர் ஏபிசிடி, பம்பரக் கண்ணாலே, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதோடு மட்டுமல்லாமல் முக்கியமாக நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படத்தில் சில நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் அவருடைய கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் நடிகை பிரேமா பிரியாவிற்கு ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார். இந்நிலையில் நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் பிரபல சேனல் ஒன்று இருக்கிறது பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது ,என் கணவர் இறந்த பிறகு சாப்பிட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறேன் என் மகளை படிக்க வைத்து வருகிறேன் அவரது எதிர்காலம் மட்டுமே என்னிடம் தெரிவதாக உள்ளது.

prema priya
prema priya

எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை இவ்வாறு எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு நடிகர் வடிவேலு தான் காரணம் அவர் சுறா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய எனக்கு ஒரு காட்சி இருந்தது ஆனால் வடிவேலு என்னை அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறி வேறு ஒரு நடிகையை போட்டார் இதனால் நான் அவரிடம் நேரடியாக சண்டை போட்டேன் நான் சண்டை போட்டதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது.

என்னை வடிவேலிடம் அறிமுகப்படுத்திய ஆர்டிஸ்ட்டுக்கும் அவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை வந்தது இதனால் எனக்கு வரும் வாய்ப்பை வடிவில் தடுத்து வந்தார் இதனால் படப்பிடிப்பிலேயே பிரச்சனை இருந்த நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோர் முன்னிலையிலும் வடிவேலுவை நான் திட்டி விட்டேன் இதனால் இப்பொழுது வரை எனக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது சமீபத்தில் என் கணவரும் இறந்து விட்டதார் வாழ்க்கை மோசமாக போய்க் கொண்டிருக்கிறது என கண்ணீருடன் அவர் இதனை கூறியுள்ளார்.