ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்..! இணையத்தை புகைய விட்ட இயக்குனர் வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் இயக்குனர் என்றால் அவர் இயக்குனர் வெற்றிமாறன் தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் பல்வேறு தேசிய விருதுகளை குவித்து வருகிறது அந்த வகையில் தற்போது சூரியை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முழுமையாக முடிவடைந்த நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பின் பொழுது பட குழுவினர்கள் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சி செய்தால் மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியாது நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும் செய்ய வேண்டும். என்று கூறியிருந்தார்.

ஏனெனில் இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள் காலேஜ் படிக்கும் பொழுது ஒரு நாளைக்கு 70 சிகரெட் பிடிப்பாராம் அதுமட்டுமில்லாமல் அவர் மோதல் திரைப்படம் எடுக்கும் பொழுது ஒரு நாளைக்கு 170 முதல் 180 சிகரெட் பிடித்து இருப்பேன் என்று அவரே கூறியுள்ளார். மேலும் இவை தவறான செயல் என்று உணர்ந்த பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தற்பொழுது தவிர்த்து விட்டேன்.

அதேபோல இனி வரும் என்னுடைய திரைப்படங்களிலும் சிகரெட் பிடிப்பது மற்றும் மது வழக்கம் போன்ற எந்த ஒரு காட்சிகளும் இடம் பெறாமல் இருக்கும்படி திரைப்படம் இயக்க முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version