அந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி “சச்சினை” திட்டினேன் பதிலுக்கு அவர் கையாண்டதே வேற.. பழைய நினைவுகளை பகரும் சக்லின் முஸ்தாக்

இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுது எத்தனையோ சிறந்த வீரர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் இன்ஸ்பிரேஷன் ஆகவும் விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் 16 வயது இருக்கும்பொழுது இந்திய அணியில் நுழைந்தார்.  அன்றிலிருந்து தனது கேரியர் முடியும் வரை சிறந்த பந்துவீச்சாளர்கள் என பெயர் எடுத்த அனைவரது வந்து பந்துகளையும் சரமாரியாக அடித்து நொறுக்கி ஆச்சரியப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அந்த வீரர்கள் வாயாலேயே சச்சின் ஒரு தலை சிறந்த வீரன் என பெயர் வாங்கியவர்.

சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டும்தான்.  அந்த வகையில் மேக்ராத், அத்தர், பிரெட்லீ, ஷான் பாண்ட்,  முஸ்தாக், ஷேன் வார்னே என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக சச்சின் டெண்டுல்கர் விளங்கி உள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழப்பந்துவீச்சாளர் சக்லின் முஸ்தாக் சமீபத்திய பேட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசி உள்ளார்.

எனக்கும், சச்சின் உடன் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது இன்று வரை மறக்கவே முடியாது நாங்கள் கன்னடாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்றோம் நான் இங்கிலாந்து கவுண்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவிட்டு அதே திமிருடன் நான் வந்து வீச இருந்தேன் சச்சின் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர் நான் முதலில் வந்து வீசும் போது அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்பட்டேன்.

பிறகு அவரை தகாத வார்த்தைகளில் பேசினேன் ஆனால் அவர் என் அருகில் வந்து சில வார்த்தைகளை சொன்னார்.. சக்கி நீ இப்படி செய்வாய் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை உன்னை பார்ப்பதற்கு அவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆள் மாதிரி தெரியவில்லை. நான் உன்னை மிகவும் நல்லவன் என்று நினைத்தேன் ஆனால் நீ இப்படி செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. பின் தவறு செய்து விடுமே என்ற மனவருதத்திலேயே தொடர்ந்து பந்து வீசினேன் இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சச்சின் நல்லாப்பக்கமும் பவுண்டரிகளாக விளாசினார் கடைசியில் நான்  எனக்கு தெரிந்தது சச்சின் என்னிடம் அவருடைய சிறந்த யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார் ஒருவரைப் பற்றி நாம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டால் நாம் அதை பற்றி சிந்திப்போம் அவருக்கு எதிராக நாம் ஆக்ரோஷமாக விளையாட மாட்டோம் இதைத்தான் சச்சின் என்னிடம் பயன்படுத்தினார்.

நான் சச்சின் மீது மரியாதை செலுத்த தொடங்கி விட்டதால் அவர் என்னுடைய பந்தை பவுண்டரிகளாக அடித்த ரன் சேர்த்தார் அதன் பிறகு என்னால் அவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. போட்டி முடிந்த பிறகு மாலையில் நான் சச்சினை சந்தித்து நீங்கள் புத்திசாலித்தனமான வீரர் என்று பாராட்டினேன் அதற்கு அவர் சிரித்தார். பேட்டிங் மூலம் மட்டுமல்லாமல் வார்த்தையின் மூலமும் சச்சின் நன்றாகவே என்னை சிக்க வைத்து விட்டார் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment