கமலுக்காக அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.. வேற எந்த நடிகராக இருந்தாலும் நோ – ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்த தகவல்

Ramya pandian : தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகையாக  வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 16, 17 வயது இருக்கும் பொழுது சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் நல்ல நல்ல படங்களில் நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் குறையவே இல்லை மேலும் வாய்ப்புகளும் குவிக்கின்றது.

ஆம் வருடத்திற்கு குறைந்தது 4,5 படங்களில் அசால்டாக நடித்து விடுவார் அந்த படங்களில் அவருடைய கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டுள்ளது அப்படி இவர் நடித்த படையப்பா, பாகுபலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் இவருடைய கேரக்டர் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு சேர்த்துள்ளது.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சினிமாவில் நடித்த பொழுது பல படங்கள் தோல்வியடைந்தது அதன் பிறகு தெலுங்கில் சில படங்கள் ஹிட் ஆனது மீண்டும் ஒரு சில நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு ஒரு தெலுங்கு படத்தில் வில்லியாக நடித்தேன் அந்த சமயத்தில் எந்த ஹீரோயினும் வில்லியாக நடிக்க சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் எனக்கு நடிக்கலாம் என்று தோன்றியதால் நடித்தேன். அதை பார்த்துவிட்டு படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இன்றுவரை நீலாம்பரி கதாபாத்திரம் பேசப்படுகிறது நான் ஒரே அடியாக வெற்றி படங்களில் நடித்ததே இல்லை. சில படங்கள் வெற்றி பெறும் சில படங்கள் தோல்வியடையும் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்..

ஹீரோயின்னாக, துணை நடிகையாக, அம்மாவாக, ஐட்டம் டான்ஸராக வில்லியாக என எதுவாக இருந்தாலும் நடித்தேன். பஞ்சதந்திரத்தில் மேகி என்ற விலை மாது கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள் அது கமல் படம் என்பதால் மட்டுமே சம்மதித்தேன். இல்லை என்றால் நடித்திருக்கவே மாட்டேன் என ரம்யாகிருஷ்ணன் அந்த பேட்டியில் கூறினார்.

Leave a Comment