இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எல்லோரும் என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க – கே எஸ் ரவிக்குமாரிடம் ஓபன்னாக பேசிய அஜித்.

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து சமுதிரகனி மலையாள நடிகை மஞ்சுவாரியர் மற்றும் வீரா போன்றோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜோராக போய்க் கொண்டிருக்கிறதாம் வெகுவிரைவிலேயே படத்தை முடித்துவிட்டு வருகின்ற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் பின் முதல் முறையாக நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.

உடன் கை கோர்த்து தனது 62வது திரை படத்தில் நடிப்பதற்கான வேலைகளை பார்ப்பார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார்.

அதில் அவர் சொன்னது : அஜித்தை வைத்து நான் வரலாறு என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தேன் இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு  கதாபாத்திரத்தில் அஜித் பெண்மை கலந்த ஒரு நளினம் கொண்ட பரதநாட்டிய கலைஞராக நடித்திருப்பார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் தன்னை கிண்டல் பண்ணுவார்களா என கேஎஸ் ரவிக்குமார் இடமும் கேட்டுள்ளார்.

அதற்கு அவரோ அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது நிச்சயமாக நீங்கள் பண்ணக்கூடியது வருங்காலத்தில் பலரும் கொண்டாடுவார்கள் என கூறினார் அவர் சொன்னது போலவே படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடியதாம்.

Leave a Comment