சூரரைப் போற்று படத்தை விடுங்க.. பெஸ்ட்டாக இசையமைத்தது இந்த படத்திற்கு தான் – ஜி வி பிரகாஷ் வெளிப்படை.!

0
g-v-prakash
g-v-prakash

சினிமா உலகில் பார்க்கின்ற தொழிலையும் தாண்டி வெவ்வேறு தொழில்களில் பிரபலங்கள் ஈடுபடுகின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளர்கள் சிலர் அண்மைக்காலமாக படங்களிலும் நடித்து கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் இருக்கிறார்.

இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ஹீரோவாக வெற்றி கண்டு ஓடுகிறார்.  ஒரே சமயத்தில் இரண்டையும் மேனேஜ் செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்ததால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், ரஜினி, தனுஷ், கார்த்தி, அதர்வா போன்றவர்கள் படங்களுக்கு இசையமைத்து. தன்னை பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். மேலும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வெற்றியை ருசித்து வருகிறார் அண்மையில் கூட சூரரை போற்று படத்திற்கு இசை அமைத்ததால் அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிறப்பாக ஓடி கொண்டு இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருந்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. நான் சினிமா உலகில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

ஆனால் எனக்கு ரொம்ப நல்லா இசையமைத்தது என்றால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு தான் ஆனால் அப்பொழுது யாருமே பெரிய அளவில் பேசவில்லை அது எனக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது ஆனால் அதன் பின் தனுஷின் ஆடுகளம் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக இசையமைத்து பல பாராட்டுக்களை பெற்று ஓடிக்கொண்டே இருக்கிறார்.