“கோமாளி” படத்தில் பள்ளி மாணவனாக நடிக்க நான் இத்தனை கிலோ உடல் எடையை குறைத்தேன் – ஜெயம் ரவி

jeyam-ravi
jeyam-ravi

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்து உள்ளவர் நடிகர் ஜெயம் ரவி இவர் அண்மைக்காலமாக நடித்த திரைப்படங்கள் எதுவுமே வெளிவராமல் இருந்து வந்துள்ளன. இதனால் இவரது மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி கைவசம் தற்பொழுது பொன்னியின் செல்வன், இறைவன், அகிலன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் நடிகர் ஜெயம் ரவி விட்ட இடத்தை பிடிப்பார் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஜெயம் ரவி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோமாளி இந்த படம். முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் ஜெயம் ரவி உடன் கைகோர்த்து காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கவிதா.

மற்றும் கே எஸ் ரவிக்குமார், வருண், பிஜிலி ரமேஷ், மணிகண்டன் வைத்தியநாதன், ஆர் ஜே ஆனந்தி, நித்யா சத்யா மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி பள்ளி மாணவனாக ஒரு குறிப்பிட்ட காட்சிகள் நடுத்திருப்பார் இந்த காட்சியில் நடிப்பதற்காக மட்டுமே நடிகர் ஜெயம் ரவி சுமார் 18 கிலோ உடல் எடை குறைத்துள்ளார் என பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் பேசி அவர் அந்த 18 கிலோ உடல் எடையை  குறைக்க நான் எடுத்துக்கொண்ட காலம் வெறும் இரண்டு வாரம் தான்.. அந்த இரண்டு வாரம் முழுவதும் நான் வெறும் தக்காளி மற்றும் கேரட்டை மட்டுமே சாப்பிட்டு வந்தேன். எப்பொழுதாவது  பிளாக் காபி குடிப்பேன் என கூறினார் இதை தவிர வேறு ஒன்றும் பண்ணவில்லை என அவர் சொன்னார்.