எனக்கு இந்த நடிகரை தான் பிடிக்கும்.. யாராவது அவருடன் நடிக்க சான்ஸ் தாங்க என கேட்ட ராகுல் ப்ரீத்தி சிங்.!

rahul preet sing
rahul preet sing

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் தமிழில் சில படங்களில் நடித்தாலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள் மேலும் அவர்கள் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகைகளாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் க்யூட்டான நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.

இவர் தற்பொழுது கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த நடிகர் ஒருவர் பற்றிய மிகவும் ஆசையாக பேசி உள்ளார் மேலும் அவருடன் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன் எனவும் அவருடைய வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்து வசூல் நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜயை பற்றி தான் கூறியுள்ளார்.பொதுவாக விஜய் பிடிக்காத நடிகர்களை கிடையாது ஏராளமான நடிகைகள் பொது மேடைகளில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான் என கூறி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

தற்பொழுது விஜய் தன்னுடைய 66 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும் ராஷ்மிகா மந்தனா விஜயின் தீவிர ரசிகை என்பது பலருக்கும் தெரியும் ஏனென்றால் ஏராளமான மேடைகளில் ராஷ்மிகா மந்தனா விஜயை பற்றி பேசி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ள கீர்த்தி ஷெட்டியும் விஜயின் தீவிர ரசிகை எனவே விஜயுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்திருந்தார். இவர்களைத் தொடர்ந்து இந்த வரிசையில் தற்பொழுது ரகுல் பிரதீப் சிங் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்த ஆசை இருப்பதாக கூறியிருந்த நிலையில் எந்த நடிகருடன் நடிக்க ஆர்வம் இருக்கிறது என கேட்டதற்கு தளபதி விஜய் கூட நடிக்க மிகவும் ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஏனென்றால் முக்கிய காரணம் நடனம், நடிப்பு என அனைத்து திறமைகளும் இருக்கக்கூடிய நடிகர் எனவே அவர் கூட நடிக்க வேண்டும் யாராவது எனக்கு இருக்கும் இந்த ஆசையை விஜயிடம் வெளிப்படுத்தி எனக்கு சான்ஸ் வாங்கி கொடுங்கள் என ராகுல் ப்ரீத்தி சிங் வெளிப்படையாக கூறியுள்ளார்.