அஜித்துக்கு நான் உதவினேன் அந்த நன்றியை கூட மறந்து விட்டார் கண் கலங்கிய போண்டா மணி.! வெளிவந்த பரபரப்பு செய்தி

0
ajith
ajith

திரை உலகில் நடிக்கும் பலரும் கோடிக்கணக்கில் காசு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் டாப் ஹீரோக்கள் மட்டும் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் மற்றபடி குணசித்திர கதாபாத்திரம், காமெடியன்கள் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள் இதனால் ஒரு கட்டத்தில் அவர்கள் சொந்த செலவிற்கு கூட காசு இல்லாமல் தவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவ செலவுக்கு கூட காசு இல்லாமல் மற்ற நடிகர்களின் நாடுவது வழக்கம் அந்த வகையில் போண்டாமணி மருத்துவ உதவிக்கு காசு இல்லாமல் பல நடிகர்களிடம் காசு கேட்டார் ஒரு சிலர் முன்வந்து உதவினார் ஒரு சிலர் கண்டுக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக உடல் நிலை  உடைந்து தற்பொழுது மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் தனக்கு உதவி செய்தவர்கள் மற்றும் செய்யாதவர்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் போண்டாமணி கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் உடல்நிலை  பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோர்கள் எனக்கு உதவி செய்தனர் நான் அதை எதிர்பார்க்காதது. நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன் இது முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு தெரியும்..

ஆனால் அமைச்சர் சுப்பிரமணியை அனுப்பி எனக்கு நல்ல சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார் அதேபோல ரஜினி சாரும் தகவல் அனுப்பினேன் உடனே என்னை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார் சி சிகிச்சைக்கு பின் குடும்பத்தோடு வீட்டுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். காமெடி நடிகர் வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை அவர் ரீ என்ட்ரி கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் என்னை நடிக்க அழைக்கவில்லை..

தேடிச் சென்ற பொழுது பார்க்காமலேயே திருப்பி அனுப்பினார். அஜித்துக்கும் துவக்கத்தில் நான் உதவி செய்துள்ளேன் அஜித் சினிமாவில் வாய்ப்பு தேடிய பொழுது நான் இயக்குனர் வி. சி. குகநாதன் அலுவலகத்தில் இருப்பேன் அங்கு வந்து அஜித் வாய்ப்பு கேட்டார் குகநாதன் இயக்கத்தில் ரஞ்சித்த நடித்து பாதியில் நின்ற திரைப்படம் “மைனர் மாப்பிள்ளை” எனவே இன்னொரு ஹீரோவை அந்த படத்தில் போட்டு எடுக்க குகநாதன் முடிவு செய்தார்.

அப்பொழுது அஜித் பெயரை நான் தான் பரிந்துரை செய்தேன் அப்படித்தான் அந்த படத்தில் நடித்தார் அஜித். அந்தப் படத்தில் நானும் நடித்தேன் ஆனால் என்னிடம் எப்பொழுதும் விசுவாசமாக இருப்பார் அஜித் ஆனால் படிப்படியாக வளரும் பொழுது எனக்கு அவர் வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை.. அது கூட பரவாயில்லை எனக்கு உதவும்படி அவர் என் மேனேஜர் மூலம் தகவல் சொன்னேன். ஆனால் அவர் தரப்பிலிருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை..

சினிமா அப்படிதான் எல்லோரும் நன்றியுடன் இருக்க மாட்டார்கள் மேலும் ரசிகர்கள் மூலம் தான் நடிகர்கள் வாழ்கிறார்கள் ஆனால் அவர்களை சந்திக்காமல் அஜித் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என போண்டாமணி கூறி உள்ளார் அஜித் பொதுவாகவே பலருக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு கொண்டவர் ஆனால் போண்டாமணி விஷயத்தில் இப்படி செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.