சினிமாவில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் – அப்பா பெயரை பயன்படுத்தவில்லை.! அடித்து சொல்லும் பிரபலம்.

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின்  மகன் மகள்களும் இப்பொழுது சினிமா உலகில் கால் தடம் பதித்து அசத்துகின்றனர். சினிமா வாய்ப்பு அவர்களுக்கு ஈசியாக கிடைத்துவிட்டாலும் ரசிகர்கள் அவரது திறமையை பார்த்து கொண்டாடினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். அதை உணர்ந்து கொண்ட வாரிசு நடிகர் நடிகைகள் தனது அப்பா அம்மாவின் பெயரை பயன்படுத்தாமல் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அருண் விஜய் சினிமா உலகில் தனது திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி கண்டு ஓடி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை திரைப்படம் கூட மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அருண் விஜய் கையில் அக்னி சிறகுகள், பாக்சர், பார்டர் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். அப்பொழுது அவர் சொன்னது என்னுடைய அப்பாவின் பெயரை நான் எந்த இடத்திலேயும் பயன்படுத்தியதே கிடையாது நான் நடிக்கும் படத்தின் கதையை எப்பொழுதுமே எனது அப்பா தேர்வு செய்தது கிடையாது அப்பா என்னிடம் சொல்லுவது நீதான் மேலே வர வேண்டும் என கூறுவார்.

யாராக இருந்தாலும் அவர்கள் தனது திறமையினால் தான் சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் நமக்கு திறமை இல்லை என்றால் நிலைத்து நிற்க முடியாது என்னதான் அப்பா சினிமாவில் இருந்தாலும் நமது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள் இன்னும் சொல்ல போனால் அப்பா சினிமாவில் இருந்தால் அவர்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு தான்.

நமக்கு அதிகரிக்கும் எனவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறேன். என்னை போல பலரும் தற்பொழுது சினிமா உலகில் ஜொலிக்கின்றனர் அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரும் சினிமா உலகில் என்றி கொடுத்து அசதி உள்ளார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன் என சொன்னார்.

Leave a Comment