எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்ற ரஜினியின் மகள்..! ஆழ்ந்த யோசனையில் ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது வழக்கம்தான் அந்த வகையில் இவருக்கு அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் தர்பார் இத்திரைப்படம் நல்ல வசூலையும் பெற்று அவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது படப்பிடிப்பு  தற்சமயம் முடிவடையும் நிலையில் இருப்பதன் காரணமாக இத் திரைப்படமானது வருகின்ற தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி அவர்கள் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இதனை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் மற்றொரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக  தெரியவந்துள்ளது.  அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தனுஷ் இயக்கியிருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறு உருவாகும் திரைப்படமானது ரஜினியின் 120வது திரைப்படமாக அமையும் என கூறவுல்லார்கள்.

rajini-2
rajini-2

ஏற்கனவே ரஜினியின் மகள் சௌந்தர்யா கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்தை ஏக் இருந்த நிலையில் அத்திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது இந்நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற ரஜினிகாந்த் அவர்கள் யோசனையில் இருக்கிறாராம்.

rajini-1
rajini-1

Leave a Comment