என் வாழ்க்கையில் அதை செய்ததே இல்லை வக்கீல் கேட்டும் மறுத்த எம் ஆர் ராதா.!

0

தமிழ் திரையுலகில் தற்போது உள்ள நடிகர்கள் ஏனோதானோ என நடித்து விட்டு போகிறார்கள் ஆனால் அந்த காலத்திலேயே தனது நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக இயல்பான நடிப்பை காட்டியவர் தான் எம்.ஆர்.ராதா.

இவர் அந்த காலத்திலேயே பல திரைப்படங்களில் தனது வசனங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடித்த திரைப்படங்களை தற்போதுகூட டிவியில் பார்த்தால் ரசிகர்கள் சூப்பராக இருக்கிறது என்றுதான் கூறுவார்கள்.

மேலும் இவரது வாரிசுகளும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடிகர் எம்.ஆர்.ராதா பிறந்த நாள் அன்று தனது அப்பாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது மகளும் பிரபல நடிகை ராதிகாவும் சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு பதிவை பகிர்ந்து அதில் இன்று 14ஆம் தேதி ஒரு ராக் ஸ்டாரின் பிறந்த நாள் என குறிப்பிட்டார்.

அதோடு எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு தனி மரியாதை உண்டு எம்.ஆர்.ராதாவை நீதிமன்றத்தில் பொய் சொல்லுமாறு கேட்டபோது கூட அவர் நன்றாக சிரித்து விட்டு பின்பு அதை மட்டும் என்னால் செய்ய முடியாது என கூறி விட்டார்.

ஏனென்றால் அதை நான் என் வாழ்க்கையில் ஒரு தடவை கூட சொல்லவில்லை என கூறியதாக ராதிகா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் மேலும் அவர் பகிர்ந்த இந்த பதிவை தற்பொழுது எம்.ஆர். ராதாவின் பேத்தி அதனை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.