“அண்ணாத்த” படத்தில் ரஜினியுடன் நடித்து முடித்துவிட்டேன்.? படம் சூப்பரா வந்து இருக்கு.? பிரபல நடிகர் குஷி.!

0

தமிழ்த் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த ஒரு அசம்பாவிதமும் செய்யாமல் தான் உண்டு  தன் வேலை உண்டு என இருப்பதால் இவருக்கு தற்பொழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்பற்றுகின்றனர் மற்றும் இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் பிடித்த நபராகவே பார்க்கின்றனர்.

அதேசமயம் மக்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் படியான படங்களை கொடுக்க சமீபகாலமாக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தற்போது இரவு பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது படத்தை உடனடியாக எடுத்து முடித்து விட்டு ரஜினியை எவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியுமோ அதற்காக வேலையை மும்பரப்படுத்தி உள்ளது.

மேலும் இவருடன் இணைந்து நடிப்பவர்களும் தீவிரம் காட்டுகின்றனர் ஆனால் இந்த படத்தில் ரஜினியின் இணைந்து பல டாப் ஜாம்பவான்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சார்ஜ் மாரியப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் நடிக்கும் அனைவருமே அடுத்து அடுத்த திரைப்படத்தை கையில் வைத்திருப்பதால் இந்த திரைப்படத்தை முடித்து விட தீவிரம் காட்டுகின்றனர் எது எப்படியோ படத்தை  தீபாவளிக்கு வெளிவர சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியைக் கொடுத்தது விட்டது.

இந்தநிலையில் சார்ஜ் மாரியப்பன் அண்ணாத்த படத்தில்  ரஜினியுடன் இணைந்து நடித்து முடித்து விட்டேன் என தற்போது தெரிவித்துள்ளார் படம் இதுவரையிலும் மிக அருமையாக வந்திருக்கிறது இதில் என்னை பணியாற்ற வைத்த இயக்குனர் சிறுத்தை சிவா சார் அவர்களுக்கும், ரஜினி ஐயா அவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும்  மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கூறினார்.