தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஆண் ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகர் அஜித் குமார். சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த வருடம் வருடம் ஒரு படத்தை கொடுத்து வருவதை தனது வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் கடைசி இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த ஒரு திரைப்படமும் வெளியிட முடியவில்லை காரணம் கொரோனா தொற்றுபரவி வந்தால் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை சந்தித்து வந்தது. இதனால் படம் வெளியிடும் தேதியையும் மாற்றப்பட்டு கொண்டே போனது. ஒரு வழியாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி உலக அளவில் கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது.
வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து கார்த்திகேயா, யோகிபாபு, புகழ், ஹுமா குரேஷி மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இதுவரை வலிமை படத்திலிருந்து அம்மா பாடல், வேற மாதிரி பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வலிமை மேக்கிங் வீடியோ, ப்ரோமோ என அனைத்தும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது அதேசமயம் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவர இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மறுபக்கம் தற்போது திரையரங்குகளில் முன்பதிவு செய்ய அனுமதி கொடுத்துள்ளது இதனையடுத்து தற்போது முன்பதிவு டிக்கெட் புக்கிங் கோலாகலமாக நடந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹுமா குரேஷி பல்வேறு யூடியூப் சேனலுக்கு தனது பேட்டி கொடுத்து வருகிறார். அதில் அவர் கூறியது : நான் அஜித்துடன் வலிமை திரைப்படத்திற்கு முன்பாகவே பில்லா 2 திரை படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதை நான் மிஸ் செய்து விட்டேன் எது எப்படியோ ஒரு வழியாக வலிமை படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் என அவர் கூறியுள்ளார்.
சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எனக்கு பல உதவிகளையும் நிறைய விஷயங்களையும் கற்று தந்து உள்ளார் அதில் ஒன்று எனக்கு சுத்தமாக தமிழ் பேச வராது எனக்கு டயலாக் மற்றும் எப்படி பேச வேண்டும் என்பதை அஜித் மற்றும் படக் குழுவில் இருக்கும் பலர் எனக்கு சொல்லிக் கொடுத்ததாக கூறினார்.