சின்னத்திரையில் மிகப் பிரபலமான சீரியல் நடிகை பாவனி ரெட்டி. இவர் முதலில் ரெட்டைவால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி என பல தொடர்கள் மற்றும் ரீயாலிட்டி ஷோ என ஓடிய இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசன்னில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவர் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், விளையாட்டு என அனைத்திலும் சிறப்பாக விளையாண்டு இறுதிவரை பயணித்தார். பிக் பாஸில் இப்படி பயணித்த பவானி ரெட்டி மறுபக்கம் அமீருடன் நல்லா பழக்கம் ஏற்பட்டது வெளியே வந்த இருவரும் காதலிப்பதுடன் மட்டுமல்லாமல் ஊர் சுத்தி வந்தனர் இப்படி ஓடிக்கொண்டிருந்த இந்த ஜோடிக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்தது.
ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் அமீரும் பாவனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்தனர் இவர்கள் நடித்த கதாபாத்திரம் சின்னதாக இருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து தற்பொழுது அமீர் மற்றும் பாவனிக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி மீடியா உலகில் ஓடும் பாவனி மற்றும் அமீர் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் அப்படி அண்மையில் நடிகை பாவனி insta பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுக்கும் அமீருக்கும் திருமணம் முடிந்தது ஏன் கூறவில்லை என கேட்டு உள்ளார். அதற்கு பதில் அளித்த பாவனி கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக நீங்களே முடிவு செய்தீர்கள்.
அதன் பின்னர் நாங்கள் இருவரும் இறந்து விட்டதாக சொன்னீர்கள் இப்பொழுது நாங்கள் ரகசியமாக திருமணத்தை சொன்னார்கள் என்று சொல்வார்கள் அடுத்து என்ன என நடிகை பாவனி எனக் கூறி உள்ளார் அவர் போட்ட அந்த பதிவு தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் படும் வைரலாகி வருகிறது.
