தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. வாரிசு படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மனோபாலா, குஷ்பூ மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திலிருந்து தற்பொழுது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தளபதி விஜய் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களில் கதை சரியில்லை என்றாலும் அவரது நடனம் மற்றும் பாடல் ஆகியவை அந்த படத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடும். அதை நாம் பல படங்களில் பார்த்து உள்ளோம்.
அந்த வகையில் தளபதி விஜய்க்காக பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி கொடுத்தவர் யுவபாரதி குறிப்பாக தளபதி விஜயின் புதிய கீதை, கில்லி போன்ற படங்களுக்கு இவர் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இதுவரை தமிழில் மட்டுமே சுமார் 1300 பாடல்களை எழுதி உள்ளார் விஜய்க்காக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் அதை எழுதியதற்காக ஒரு தடவை கூட நன்றி சொன்னதே கிடையாதாம் விஜய்.

ஆனால் அவருக்கு பின்னால் வந்த தனுஷ் சிம்பு போன்றவர்களின் படங்களுக்கு நான் பாடல் எழுதி உள்ளேன். அவர்களுக்கு அந்த பாடல் பிடித்து விட்டாலோ அல்லது ஹிட் அடித்தாலோ உடனே எனக்கு போன் செய்வார்கள் ஆனால் இந்த விஷயத்தில் தளபதி விஜய் ஒரு தடவை கூட எனக்கு போன் செய்ததே கிடையாது வாழ்த்தியதும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார் பாடலாசிரியர் யுவபாரதி.