ஃபிலிம் ஃபேர் விருது இனி எனக்கு வேண்டாம்..! இப்படி கமல் சொல்ல என்ன காரணம் தெரியுமா.?

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாலை சூடவா திரைப்படத்தில் நடித்தார். அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ரொம்ப மெனக்கெட்டு நடித்தார்..

அதனாலயே இவரது பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறின இதனால் அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது. சினிமாவில் தொடர்ந்து ஓடிய இவர்   திடீரென அரசியலில் களம் கண்டார் அரசியலிலும் கமல் நினைத்தபடி  ஒரு மிகப்பெரிய ஒரு கூட்டத்தை உருவாக்கிய தற்பொழுது வெற்றிகரமாக பயணிக்கிறார்.

இருந்தாலும் சினிமா இவரை விடாமல் துரத்தியது ஒரு வழியாக நான்கு வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே அதில் துணிந்து நடித்தார். மேலும் விக்ரம் படத்தை தயாரித்தவர். படம் வெளிவந்து  பிரம்மாண்டமான வசூலை அள்ளியது அதனைத் தொடர்ந்து தற்பொழுது கமலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.

அதில் முதலாவதாக இப்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கமல் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து வியாபாரியாக பார்ப்போம்.. உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் பல வெற்றி படங்களை அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெளிவந்து பல விருதுகளையும் அள்ளுகின்றன.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் இதுவரை 4 தேசிய விருது, 19 பிலிம் பேர் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது என பல விருதை குவித்து வைத்திருக்கிறார்.. ஹே ராம் படத்திற்காக   19வது ஃபிலிம் ஃபேர் விருதை கமலுக்கு கொடுக்கப்பட்டது அதை வாங்கிய பிறகு எனக்கு இனி விருதுகள் கொடுக்க வேண்டாம் பல இளம் திறமையான நடிகர் இருக்கின்றனர் அவர்களுக்கு பார்த்து கொடுங்கள் என கூறி இளம் தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்டு உள்ளார்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment