விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது முக்கிய திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது இதில் பாக்கியலட்சுமி கோபியை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் முன்னிலையிலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு பின்பு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா..
எங்கு செல்வது என்று தெரியாமல் அவர் சமையல் செய்யும் இடத்திற்கு தான் சென்றுள்ளார் மேலும் பாக்யாவுடன் செல்வி மற்றும் எழில் இருவரும் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வந்த ப்ரோமோவின் நாளைய எபிசோடில் பாக்கியா ராதிகாவை சென்று நீங்களும் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கேட்டுள்ளார் இதனால் ராதிகா என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்.
மறுபக்கம் கோபி தன்மகள் இனியாவிடம் பேசும்போது இனியா பேசாதீங்க அப்பா என்னிடம் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை அம்மாவை உங்களுக்கு பிடிக்காது தான் அதற்காக இப்படியா பண்ணுவீர்கள் என அழுது கொண்டே பேசியதால் கோபி தன் மகளையும் காயப்படுத்தி விட்டோமே என சற்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
மேலும் அம்மா வீட்டை விட்டுப் போனதால் இனியா ரொம்ப வருத்தத்தில் ஜெயனிடம் சென்று அம்மா கிட்ட நானும் எத்தனையோ தடவை சண்டை போட்டு இருக்கேன் ஆனால் அம்மாவே தானாக வந்து பேசுவாங்க. இப்ப அம்மா இல்லாதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக் கூறியதும் ஜெனி அம்மா நிச்சயமாக வந்து விடுவாங்க என இனியாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்.
மேலும் இதுவரை அம்மா தன் பக்கத்தில் இருந்தபோது அம்மாவை அடிக்கடி திட்டி வந்த இனியா தற்போது அம்மா இல்லாத போது தான் அவருக்கு தாய் பாசம் புரிகிறது. பாக்கியா வீட்டில் இல்லாததால் அந்த குடும்பம் மொத்தமும் கஷ்டப்படும் என்பது உறுதி.