எனக்கு அது பிடிக்காது.? நயன்தாராவிடம் நேரடியாக சொல்ல பயந்த விக்னேஷ் சிவன்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

0
nayanthara
nayanthara

மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் சரத்குமார் நடிப்பில் உருவான “ஐயா” படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் கிளாமரைக் காட்டி அசத்தினார். இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது தொடர்ந்து டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

வெற்றி நடிகையாக ஓடினாலும் நிஜ வாழ்க்கையில் பல அவமானங்கள் மற்றும் காதல் தோல்வி என அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்தார் இந்த நிலையில் தான் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். பிறகு இருவரும் ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் தற்பொழுது இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர் தற்பொழுது நயன்தாராவுக்கு  வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருகிறது கைவசம் ஜவான், நயன்தாரா, 75 டெஸ்ட், இறைவன் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் நயன்தாரா வாழ்க்கை, சினிமா இரண்டிலும் அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன்..

சுஹாசினி மணிரத்தினம் எடுத்த நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை சொல்ல முதன் முதலில் நயன்தாராவை பார்க்க அவரது வீட்டிற்கு ஆட்டோவில் தான் சென்று எனவும் பின்னர் என் வாழ்க்கை இவ்வளவு அழகாக மாறியது என கூறினார்.  நயன்தாராவை பார்க்க அவரது வீட்டிற்கு போனேன் உள்ளே உட்கார வைத்த நயன் எனக்கு கிரீன் டீ கொடுத்தார்.

tea
tea

அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது வேறு வழி இல்லாமல் குடித்தேன் அன்று பிடிக்கவில்லை என நயன்தாராவிடம் நேரடியாக கூற பயந்த விக்னேஷ் சிவன் பேட்டியில் வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நயன்தாரா மேடம் இனி விக்னேஷ் சிவனுக்கு கிரீன் டீ போட்டுக் கொடுக்காதீங்க எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.