வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என கூறிய விஜய் டிவி பிரபலம். கொந்தளிப்பில் ரசிகர்கள்

vadivelu-balaji
vadivelu-balaji

vadivelu balaji : வடிவேலு பாலாஜி இறந்துவிட்டார் என்ற செய்தியை இன்னும் யாராலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது, அந்த அளவு வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர், அப்படி இருக்கும் வரையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் வடிவேல் பாலாஜி யார் என்று கேட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் காமெடியில் கொடிகட்டி பறந்த வடிவேலுவின் மீது உள்ள அன்பால் தன்னுடைய பெயரை வடிவேலு பாலாஜி மாற்றிக்கொண்டு நிஜ வாழ்க்கையிலும் அவரைப் போலவே காமெடி செய்து வாழ்ந்து வந்தவர் வடிவேலு பாலாஜி, இவர் நடை உடை என அனைத்தும் வடிவேலு போலவே தன்னை மாற்றிக் கொண்டவர்.

சமீபத்தில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி தான் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ரசிகர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியது, இவரின் மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தார்கள், அப்படி இருக்கும் வகையில் விஜய் டிவியில் இருக்கும் சிலர் இவரை கண்டு கொள்ளாதது போல் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சி தன்னுடைய டிஆர்பியை ஏற்றிக்கொள்ள வனிதாவை வைத்து எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது, வனிதா விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வடிவேல் பாலாஜியை யார் என்று தெரியாது என வனிதா குறிப்பிட்டுள்ளார். இது தான் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேல் பாலாஜி பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் அப்படி இருக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் வனிதா இதுவரை வடிவேல் பாலாஜியை சந்தித்ததே இல்லை என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அவருடன் எனக்கு எந்த ஒரு பழக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இருவரும் ஒரே தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார் அப்படி இருக்கும் வகையில் இதுவரை வடிவேல் பாலாஜி பார்த்ததே இல்லை எனவும் வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என கூறியதும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் வனிதாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.