நடிக்கவே தெரியல என்ன விட்டிடுங்க கதறி அழுத நடிகை.! பின் பாரதிராஜா விபரித்த முடிவு.! கடைசியில் என்னாச்சு தெரியுமா.?

தற்போது இருக்கும் சினிமா உலகில் இமயம் பாரதிராஜா அவர்கள் இயக்குனராக பெரிதும் ஈடுபடாவிட்டாலும் நடிகராக தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.

இப்படி இருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த தொழிலான இயக்குனர் தான் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஏனென்றால் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரையும் சரியாக தேர்ந்தெடுத்து அந்த ரோலை அவருக்கு கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்வதில் பாரதிராஜாவுக்கு ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் பல புதுமுக நடிகர், நடிகைகளுக்கு நடிப்புன்னா என்னனு தெரியாதவர்களை வைத்து அவரிடம் இருக்கும்   திறமையை வாங்கி அந்த படத்தை வெற்றி படமாக எடுத்துவிடுவார் இப்படிபட்ட பல நடிகர் நடிகைகளை இவர் வளர்த்து விட்டுயுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யமான அதைப் பற்றி தான் நாம் பேச உள்ளோம்.

திரையுலகில் இப்பொழுது முன்னணி சம்பவங்களாக இருக்கும் பல நடிகர் நடிகைகளை வளர்த்துவிட்டு உள்ளவர் பாரதிராஜா அந்தவகையில் 1994ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான “கருத்தம்மா” திரைப்படம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த படத்திற்காக ராஜஸ்ரீ என்பவரை நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

இவருக்கு நடிப்பு அப்பொழுது சுத்தமாக வரவே இல்லை பாரதிராஜாவுடன் அசிஸ்டன்ட்டாக இருந்த பலரும் இவரை இது எப்படி ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியும் என அப்போது அரசல்புரசலாக பேசிக்கொண்டனர் பாரதிராஜாவுக்கும் இவர் நடித்த காட்சிகள் எதுவுமே பிடிக்கவில்லை

ஒருகட்டத்தில் ராஜஸ்ரீ – யும் நாம் நடிக்கும் காட்சிகள் பிடிக்காததால் தான் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டார். அதன் பிறகு பாரதிராஜாவிடம் வந்து எனக்கு நடிப்பு வரவில்லை என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அதற்கு பாரதிராஜா உனக்கு நடிப்பு நான் சொல்லி தருகிறேன் என அவருக்கு நடிக்க கற்றுக் கொடுத்து அவரை இந்த படத்தில் திரும்பவும் நடிக்க வைத்தார்.

படம் வெளியாகி அவரது நடிப்பு மக்களையும் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்த அதோடு மட்டுமல்லாமல் பாரதிராஜாவுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அதன்பிறகு இவர் பல்வேறு திரைப்படங்களை தொடர்ந்து நடித்தார் மேலும் சீரியல்களில்  தற்போது சிறப்பாக பயணித்து வருகிறார் சமீபத்தில் கூட பாலாவின் வர்மா படத்தில் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒன்னும் தெரியாத பல புதுமுகங்களை அப்பொழுதே காலகட்டத்திலேயே வளர வைத்து அழகு பார்த்தவர் பாரதிராஜா.

rajasree
rajasree
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment