திடீரென விஜயின் வாரிசு படத்திற்கு வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின் – மறைமுகமாக எச்சரிக்கிறாரா.? தீயாய் பரவும் செய்தி..

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர் நோக்கி காத்திருக்கும் திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு. இரண்டு திரைப்படங்களும் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக  அஜித் விஜய் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் இந்த படங்களை திருவிழாவைப் போல கொண்டாட காத்திருக்கின்றனர்.

அஜித்தின் துணிவு திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது அதற்கு எதிர்மறாக விஜய் குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் இந்த இரண்டு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்கிறார். ஆனால் வாரிசு திரைப்படத்தை யார் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறார் என்பது தெரியவில்லை ஆனால் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் துணிவு படத்தை ரிலீஸ் செய்வதால் அதிகப்படியான திரையரங்குகள் துணிவு படத்திற்கு கிடைக்கும் என என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின்  கலகத் தலைவன் படத்தின் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டார் வெளியே வந்த அவர்  பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  தமிழகத்தில் துணிவு படத்தை நான் ரிலீஸ் செய்கிறேன் படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை..

படம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் என கூறினார். மேலும் பேசிய அவர் வாரிசு படத்தை நாங்கள் ரிலீஸ் செய்யவில்லை என்றாலும் அந்த படம் வெற்றி பெற  வாரிசு பட குழுவுக்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.  இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment