தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருப்பவர் பார்த்திபன் இவர் இயக்குனராகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார். இவர் கடைசியாக இயக்கி நடித்த ஒத்த செருப்பு, இரவின் நிழல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் அந்த படங்களில் நடிகர் பார்த்திபன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
அதன் காரணமாகவே தொடர்ந்து பல பட வாய்ப்புகள் பார்த்திபனுக்கு கிடைத்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் நடிகர் பார்த்திபன் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் படம் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் பார்த்திபன் கமிட் ஆகிய நடித்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட்டு குறையாமல் இருந்து வருகிறது பார்த்திபன் அண்மையில் பொன்னியின் செல்வன் பிரஸ்மீட்டில் பேசிய போது ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்தும் பேசுகிறார். அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்..
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் சோழ வம்சத்தை பற்றி சொல்லியிருப்பார்கள். இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் போன்றவர்களின் இது பெரிய அளவில் இருந்தது ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ஆனால் படம் வெளிவந்த போது கொண்டாட தவறிவிட்டனர். ஆனால் பிறகு இந்த படம் சூப்பராக இருக்கு இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சொல்லி உள்ளது. விரைவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் படத்தில் நான் நடித்த கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் அவரது இந்த அப்டேட் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.