கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 – ல் நான் விளையாடவில்லை எனது பெயரை அந்த லிஸ்டில் இருந்து தூக்குங்கள்.! பிரபல நடிகை கோபம்.?.

உலக நாயகன் கமலஹாசன் சமீபகாலமாக வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டு வருகிறார். சின்னத்திரையில் விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் இதுவரை நான்கு சீசன்களில் சிறப்பாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது

இதற்கான ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவை இணையதள பக்கத்தில் வெளிவந்த நிலையில் இந்த போட்டியில் யார் பங்கு பெறுவார் என்பதை தற்போது ரசிகர்களும் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலும் முறையான படி வெளிவராததால் ரசிகர்கள் தனக்கு பிடித்த ஃபேவரிட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் ஒரு பக்கம் புரளியை கிளப்பி வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரையிலும் உள்ள எல்லா சீசன்களிலும் இந்த ஒருவரின் பெயர் மட்டும் இடம் பெற்றுக் கொண்டே வருகிறது ஆனால் இவர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டதே கிடையாது.

அந்த பிரபலம் வேறு யாருமல்ல  நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான். பிக் பாஸ் சீசன் 5 ல் இவரது பெயர் அடிபட்ட நிலையில் அவருக்கு பதில் அளித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பிக் பாஸ் சீசன் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் எனது பெயர் அடிப்பட்டு கொண்டு தான் இருக்கிறது ஆனால் நான் இதுவரையிலும் எந்த ஒரு பிக்பாஸ் வீட்டிலும் விளையாடியது கிடையாது இப்பொழுதும் எனது பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள் என கூறி உள்ளார்.

Leave a Comment

Exit mobile version