ரஜினி சொன்ன வார்த்தைகளை நான் அப்பொழுது கேட்கவில்லை ஆனால் இப்பொழுது உணருகிறேன் “ராஜவம்சம்” – செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை உடைத்த சசிகுமார்.

rajini-and-sasikumar
rajini-and-sasikumar

தமிழ் சினிமாவில் இயக்குனராக கால்தடம் பதித்து பின் நடிகராக விஸ்வரூபம் எடுத்த அவர் நடிகர் சசிகுமார் ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த சசிகுமாருக்கு ஒரு கட்டத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த பல்வேறு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் இதிலும் தோல்வியை தான் தந்தன.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான எம்ஜிஆர் மகன் பெரிய அளவு வெற்றி பெறவில்லை அதை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் கதிர்வேலு இயக்கத்தில் செந்தூர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ராஜவம்சம்” இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தில் சசிகுமாருடன் கைகோர்த்து நிக்கி கல்ராணி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு புரோமோஷன் வேலைகள் அண்மையில் தொடங்கியது. மேலும் பத்திரிகையாளர்களையும் ராஜவம்சம் படக்குழு சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் சசிகுமார். ராஜவம்சம் படம் ஒரு கூட்டு குடும்பம் பற்றி பேசும் படமாக அமைந்துள்ளது இந்த படத்தின் கதையை என்கிட்ட சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அபின் தான் நடிக்கவே கஒத்துக் கொண்டேன் என கூறினார் இந்த படத்தை மிக சிறப்பாக வந்துள்ளது ஒவ்வொருவரும் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படம் நிச்சயம் மக்களை கவரும் என கூறினார் மேலும் தயாரிப்பாளர் பல பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டித்தான் ஒரு படத்தை தயாரிக்க முடியும் மேலும் திரையரங்கில் வெளியிடுவதும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ஆனால் செந்தூர் பிலிம்ஸ் செய்து காட்டியுள்ளார் நானும் ஒரு தயாரிப்பாளராக இருந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன் என கூறினார்.

நான் பேட்ட படத்தில் நடிக்கும் போது ரஜினி என் கிட்ட சொன்னது நீ என்ன வேணுமானாலும் பண்ணு ஆனால் படம் மட்டும் தயாரிக்காத என ரஜினி சார் சொன்னார். அப்போ எனக்கு தெரியல ஆனால் இப்பொழுது உணர்கிறேன் என கூறினார்.  மேலும் பேசிய சசிகுமார் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் பணியாற்றியவர்களுக்கு மிக்க நன்றி என கூறினார்.