புகைப்படத்தை பார்த்து நம்பாதீர்கள்.. வாரிசு படத்தில் நான் நடிக்கவில்லை – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை.!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் தளபதி விஜய். இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகிறது இருப்பினும் இந்த படத்தில் காமெடி, ஆக்சன் போன்றவைகளில் இடம்பெறும் என படத்தின் தயாரிப்பாளரும் இந்த படத்தில் நடித்து வரும் சரத்குமாரும் ஏற்கனவே பேட்டியில் சொல்லி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூர்  பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்து சரத்குமார் ஷாம், பிரபு ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றனர்.

பல பிரபலங்களில் இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடிக்கிறார் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் குஷ்பு இந்த படத்தில் நடிக்கவே இல்லையாம்..

kusboo and vijay
kusboo and vijay

ஆனால் இவர் விஜய் உடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்தது இது குறித்தும் பதில் சொல்லியுள்ளார் அதாவது நான் விஜயை பார்க்கத்தான் போனேன்.. படத்தில் நடிக்கவில்லை என ஒரே போடாக போட்டுள்ளார் இந்த செய்தி தற்போது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

Leave a Comment