தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வரும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டு வரும் நிலையில் தொடர்ந்து பல கோடி பட்ஜெட் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடன் நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லியோ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியினை பெற்றிருந்தது.
இதனை அடுத்து தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இவ்வாறு முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லியோ பட குழு சென்னை திரும்பிய நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு எடுத்துள்ளது.
எனவே விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை நடைபெற இருக்கும் நிலையில் தற்பொழுது தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்ற உண்மையை தொடர்ந்து பிரபலங்கள் கூறி வருகிறார்கள். அதாவது இந்த திரைப்படத்தில் திரிஷா, மிஸ்கின், அர்ஜுன், கௌதமேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இவர்களை தொடர்ந்து மேலும் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீப பேட்டியில் கலந்துக் கொண்ட நிலையில் அப்பொழுது, நான் லியோ சூட்டிங் கலந்துக் கொள்ளவே இல்லை என கூறியிருந்தார். மேலும் சரக்கு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறேன் லியோவுக்கு அதிக தேதிகள் ஒதுக்கி இருக்கிறேன் சரக்கு படம் முடித்துவிட்டு தான் லியோ ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வேன் என மன்சூர் அலிகான் கூறினார்.
மேலும் இந்த படத்தில் அபிராமி முக்கிய நடித்து வருவதாக கூறியிருந்த நிலையில் அவர் சமீப பேட்டியில் நான் லியோ திரைப்படத்தில் நடிக்கவில்லை வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றிருந்தேன் அப்பொழுது லியோ பட பிடிப்பு நடந்து கொண்டிருந்தது எனவே அங்கு சென்று லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.