வெற்றிமாறன் போல் என்னால் இருக்க முடியவில்லை – நொந்துபோன லோகேஷ் கனகராஜ்.?

இளம் இயக்குனர்கள் தொடர்ந்து டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி தற்போது கமலை வைத்து கூட படங்களை எடுத்து அசத்துகின்றனர். அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கைகோர்த்து கமலஹாசன் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த பத்தல பத்தல பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரைலர் ஆகியவை மிரட்டும் வகையில் இருந்து வந்துள்ளன.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்க படக்குழு தொடர்ந்து விக்ரம் படம் குறித்தும் கமல் குறித்தும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த வண்ணமே இருக்கிறது.

ஒரு சமயத்தில் ஒரு விழா நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றிமாறன் பேசிக்கொண்டிருக்கையில் வெற்றிமாறன் எனக்கு ஏதாவது மன அழுத்தம் வந்தால் உடனே என்னுடைய குருவான பாலுமகேந்திராவுடன் சேர்ந்து சில மணி நேரம் பேசிவிட்டு வருவேன் என கூறினார்.

அதே போல் தான் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னுடைய வீட்டிற்கு உதவி இயக்குனர்கள் வந்து என்னிடம் பேசி விட்டு போவார்கள் ஆனால் எனக்கு அப்படி ஒரு அது இதுவரை இருந்ததே இல்லை எந்த பிரச்சனையானாலும் என் மன அழுத்தத்தினாலும் அதை நான் தாங்கிக் கொள்வேன் என கூறி சில மணி நேரம் மௌனமாக இருந்தது உண்டு என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Leave a Comment