இறுதிப்போட்டியில் நடந்ததை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை மோகித் சர்மா வேதனை

ஐபிஎல் 16 வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பௌவுலிங்கை தேர்வு செய்தது இதனை எடுத்து குஜராத் அணி பேட்டிங் விளையாடியது ஆரம்பத்தில் இருந்து அதிரடியை காட்டியது குறிப்பாக கில், சஹா, சாய் சுதர்ஷன் போன்றவர்கள் அதிரடியின் மூலம் அந்த அணி20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணி துரத்தியது முதல் ஓவரின் போது மழை குறுக்கிட்டது இதனால் நடுவர்கள் இந்த மேட்ச் 15 ஓவராக குறைத்தது 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது இதனை எடுத்து விளையாண்ட சிஎஸ்கே அணி விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆரம்பத்தில் நன்றாக விளையாடியது.

போக போக அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழுந்தாலும் சிக்ஸர்களும், பவுண்டர்களும் அவ்வபொழுது பறந்தன கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. மோகித்  ஷர்மா சிறப்பாக பந்து வீசினார் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது ஜடேஜா சிக்ஸ், பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்த நிலையில் மோகித் சர்மா கூறியது.. நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது.

பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். நான் அனைத்து பந்துகளையும் யார்கர்களாக வீசவேண்டும் என நினைத்தேன் எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன் என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்டியா அறிந்து கொள்ள விரும்பினார் மீண்டும் யார்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன் மக்கள் இப்படியும் சொல்லுவாங்க அப்படியும் சொல்லுவாங்க..

ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்கர் வீச  நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க நான் இதை செய்தேன் ஆனால் பந்து சென்று விழக்கூடாது இடத்தில் விழுந்து விட்டது என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

என்னால் தூங்க முடியவில்லை நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசி இருந்தால் என்னவாகி இருக்கும் போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் யோசித்து கொண்டு இருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன் இவ்வாறு மோகித் சர்மா கூறியுள்ளார்

Leave a Comment