என்ன வேணா சொல்லுங்க நான் கேட்கிறேன் ஆனா இந்த ஹீரோயின்னுடன் மட்டும் நான் நடிக்கவே மாட்டேன் புதிய முடிவெடுத்த விஜய்சேதுபதி.! ஆச்சரியபடும் சினிமா பிரபலங்கள்.

0

குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ வில்லன் என எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் விஜய்சேதுபதி.

விஜய் சேதுபதி திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப்படவில்லை என்றாலும் அவரது படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்து வருகிறது மேலும் அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும்  நல்ல பெயரை பெற்றுத் தருவதால் தமிழை தாண்டி தற்போது தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் உப்பென்னா என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அவருக்கு பேரும் புகழையும் பெற்றுத் தந்ததால் தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இருப்பினும் விஜய் சேதுபதி தற்போது தமிழில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் காரணம் நடிப்புக்கு பேர்போன உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதனால் அந்த படத்தை முடித்த பிறகே அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தற்போது அவரது கையில் அரை டஜன் படங்கள் இருந்தாலும் அந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதை எப்பொழுதும் விஜய் சேதுபதி விரும்ப மாட்டார் ஆனால் புதிய படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ரெட்டியை படக்குழுவே ஜோடி போட நினைத்தது.

ஆனால் விஜய்சேதுபதியோ தன்னுடைய உப்பென்னா திரைப்படத்தில் அவர் எனக்கு மகளாக நடித்து விட்டார் அதனால் அவருடன் ஜோடி சேர்ந்து ஹீரோயினாக நடிக்க மாட்டேன் வேறு ஒரு நடிகையை பாருங்கள் என கூறிவிட்டாராம்.