நான் தான் இந்த நாட்டின் சக்தி வாய்ந்த பெண்..! பரபரப்பை ஏற்படுத்திய கங்கான வெளியிட்ட பதிவு..!

0
kangana-2
kangana-2

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தற்போது சமூக ரீதியான திரைப்படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சமூகவலைத்தள பதிவுகளை தணிக்கை செய்ய கோரி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனுவை ரஞ்சித் சிங் என்பவர்தான் தொடர்ந்துள்ளார்.

ஏனெனில் அவருக்கு சீக்கியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளதாக அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கருத்து உரிமையை சமூக வலைதளங்களில் நடிகை கங்கனா மிகவும் தவறாக பயன்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் அவரின் சமூகவலைத்தள பதிவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று கூறியது மட்டுமில்லாமல் அவருக்கு எதிராக பல பதிவுகள் செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் அந்த வழக்குகளை மும்பைக்கு மாற்றி விசாரிக்க சொல்லியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நமது நடிகையை சுமார் ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என அவருடைய மணுவில் தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்நிலையில் நடிகை கங்கனா தான் இந்த நாட்டின் சக்தி வாய்ந்த பெண் என்று தன்னைத்தானே அவர் கூறி உள்ளார் இவ்வாறு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

kangana-1
kangana-1

ஏற்கனவே இவர் டுவிட்டர் பக்கத்தில் சமூக ரீதியாக சர்ச்சைக்குரிய பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டதன் காரணமாக தான் இவருடைய டுவிட்டர் கணக்கு சில மாதங்களுக்கு முன்பாக நிரந்தரமாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.