“அஞ்சான் திரைப்படம்” தோல்வியை தழுவ நானும் ஒரு வகையில் காரணம்.? மேடையில் உண்மையை உடைத்த லிங்குசாமி.!

0
anjan-
anjan-

நடிகர் சூர்யா எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் சூரியன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அஞ்சான் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். சூர்யாவுடன் கைகோர்த்து வித் யுத் ஜமால், சமந்தா, சூரி, முரளி ஷர்மா, ராஜ்பால் யாதவ், சத்தியன், உமாரியா சாங், மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி இருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாததால் பெரிய அளவு வெற்றியை பெற முடியாமல் போனது. இந்த படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொல்லியது. அஞ்சான் திரைப்படம் கேரளாவில் மாபெரும் வெற்றியடைந்தது.

அதேபோல் ஹிந்தியில் சூப்பர் ஹிட் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் அஞ்சான் படம். அந்த படத்தின் தோல்விக்கு நான் கூட காரணமாக இருக்கலாம். திரைக்கதை கூட ஒரு காரணம் பல கதைகள் அப்பொழுது மாறியது எனக்கு ஒரு கதை நிலையாக நின்றால் தான் பிடிக்கும் அதுவும் இந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அஞ்சான் படம் பிடிக்காத காரணத்தினால் தான் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களுக்கு ஒரு படம் மிகவும் பிடித்திருந்தால் அப்பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என கூறினார். லிங்குசாமி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள வாரியார் திரைப்படம் வருகின்ற ஜூலை 15 வெளிவர உள்ளது.