நான் படியேறி மேல வந்தவன் இல்ல எதிரிகளை மிதிச்சேரி மேல வந்தவன்.! வெளியானது பத்து தல படத்தின் டீசர் இதோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பத்து தல படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று ஒரு அப்டேட் வெளியாகும் என அறிவித்திருந்தது.

அந்த வகையில் பத்து தல படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் நார்தன் இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டார் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், டிஜெய் அருணாச்சலம், கலையரசன், கவுதம் மேனன், உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதாக இணையத்தில் சில வதந்திகள் பரவி இருக்கிறது அது மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பாங்காங் சென்று இருப்பதாகவும் அதனால் பத்து தல படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதாகவும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கேங்ஸ்டார் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு மறுபடியும் அறிவித்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு 2 அல்லது வினை தாண்டி வருவாயா 2 ஆகிய திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதோ பத்து தல படத்தின் டீசர்.

Leave a Comment