என்னோட இந்த படத்துல நான் ஹீரோ இல்ல.. நீ தான் வில்லனை புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.!

சினிமாவுலகில் படத்தின் வெற்றிக்கு முக்கியமாக பாடுபடுவது ஹீரோ ஹீரோயின் அதை விட்டால் இயக்குனரை தான் நான் பெரிதும் புகழ்ந்து தள்ளுவோம் ஆனால் அந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பது என்னவோ காமெடி மற்றும் வில்லன் ரோல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீடியோ வெளிச்சத்திற்கு வருகின்றன அதனால்தான் தற்போதைய காலகட்டத்தில் ஹீரோவை விட வில்லனாக நடிப்பவர்களுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. தற்பொழுது இது நடக்கிறது ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு வில்லனை புகழ்ந்து தள்ளுவது அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் அதனை செய்து காட்டியவர்கள் ஒரு சிலரே.

அந்த வகையில் 90 காலகட்டங்களில் டாப் நடிகராக இருந்த விஜயகாந்த். மற்ற முன்னணி நடிகர்களைரஜினி கமல் சரத்குமார் கார்த்தி போன்றவர்களை ஓவர்டேக் செய்து திக்குமுக்காடி வைத்தார். அதற்கு காரணம் சினிமாவில் தொடர் படங்களில் நடித்து ஹிட் படங்களை அள்ளி கொடுத்து கொண்டே இருந்ததால் அவரது இடத்தை நெருங்க முடியாமல் மற்ற நடிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர்.

மேலும் விஜயகாந்த் கதையை நன்கு புரிந்துகொண்டு நடிப்பதால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றியை பெறுகின்றன அதுவும் குறிப்பாக பல குறைந்தது 100 நாட்களுக்கு மேல் ஓடி விடும் இதனால் அதிக வசூலையும் அத்தகைய திரைப்படங்கள் பெற்றன.

இதற்கு முக்கியமாக பலம் சேர்ப்பது விஜயகாந்த்தின் ஆக்சன் காட்சிகளில் பின்னுவது தான் இவருக்கு ஏற்ற வில்லனாக வெயிட்டான ரோலில் நடிக்க பல வில்லன்களை தேர்வு செய்து தான் நடிக்க வைப்பார். அந்த வகையில் விஜயகாந்துக்கு மிக சிறப்பான வில்லனாக பார்க்கப்படுவது அப்போதைய காலகட்டத்தில் ஆனந்தராஜ்.

உடம்பை கட்டுக்கோப்பாக முறுக்கேற்றி வைப்பதால் வில்லன்கள் அவருக்கு மிக சூப்பராக செட் ஆகும் அப்படி தான் விஜயகாந்துடன் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் ரோலில் நடித்து அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவினார். மேலும் தமிழ் சினிமாவில் விஜயகாந்தும் ஆனந்தராஜன் இணைந்து புலன்விசாரணை, மாநகர காவல் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன இந்த படத்தில் ஆனந்தராஜ் நடிப்பு விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக இருந்தது.

குறிப்பாக மாநகர காவல் படத்தில் ஆனந்தராஜ் ராபின் என்ற கேரக்டரில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது அப்போது விஜயகாந்த் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் நீ தான் ஹீரோ என்று ஆனந்தராஜ் பார்த்து அப்பொழுதே புகழ்ந்து தள்ளினாராம். ஆனந்தராஜ்க்கு ஒன்றும் புரியவில்லையாம் மிகப் பெரிய ஹீரோ அவரை புகழ்ந்தது தள்ளியது அவருக்கே மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாம்.

Leave a Comment